பக்கங்கள்

பக்கங்கள்

18 மார்., 2016

பல்வேறு வதந்திகள் பரவிய நிலையில் ஜெயலலிதாவுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு


அதிமுக பொதுச் செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதாவை ‌தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசியுள்ளார். போயஸ் கார்டனில் நடைபெற்ற இந்த சந்திப்பு 30 நிமிடங்கள் நீடித்தது.
அதிமுக பொருளாளரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார் ‌என்பது போன்ற பல்வேறு வதந்திகள் பரவி வந்த நிலையில் அவர் முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது பேசப்பட்ட விவரங்கள் குறித்து அதிகாரப்பூவர்வமாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருப்பதாக ஊட‌கங்களில் வெளியான செய்திகளை சுட்டிக்காட்டி கருணாநிதி அறிக்கையும் வெளியிட்டிருந்தார்