பக்கங்கள்

பக்கங்கள்

3 மார்., 2016

குனிந்தது போதும்...பொங்கி எழு தலைவா! தனிக்கட்சி தொடங்குகிறாரா ஓபிஎஸ்?
அதிமுக-வில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து ஓரங்கட்டப்படுவதால் தனி கட்சியை தொடங்க அவரது ஆதரவாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர்களான சென்னை - வேளச்சேரி எம்.எல்.ஏ-வான அசோக், மீனவர் அணி மாநிலத் துணைச் செயலாளர் ரமேஷ், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்றப் பொருளாளர் வரகூர் அருணாசலம், தேனி மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணிச் செயலாளரும் தமிழ்நாடு உரக்கட்டுப்பாடு மார்க்கெட்டிங் ஃபெடரேசன் தலைவருமான எல்லைப்பட்டி முருகன் என பலரும் நீக்கப்பட்டனர்.
ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு கடந்த பிப்ரவரி 26-ம் திகதி போடியில், 68 ஜோடிகளுக்குத் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
விழா அழைப்பிதழில் தலைமை ஓ.பன்னீர்செல்வம் என்று போடப்பட்டிருந்த நிலையில், விழா நடந்தபோது அவர் விலக்கி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அவரின் இடத்தில் ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ-வான தங்க தமிழ்ச்செல்வன் முன்னிறுத்தப்பட்டுள்ளார்.
இப்படி தொடர்ந்து ஓரங்கட்டப்படுவதால் கடுப்பான அவரது ஆதரவாளர்கள் தனிக்கட்சி தொடங்க அழைப்பு விடுத்துள்ளனர்.
அதுமட்டுமின்றி அவர்கள் ஒட்டிய போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
பொறுத்ததுபோதும் பொங்கி எழு தலைவா...குனிந்தது போதும்...நிமிர்ந்திடு தலைவா....தமிழகம் திரும்பிடும் உன்னை நோக்கி...தமிழகத்தை காக்க மீண்டும் தமிழக முதல்வராகவா...
என்ற வசனங்கள் அடங்கிய போஸ்டர் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் அப்பனா அடுத்த ஆப்பு பன்னீர்செல்வத்துக்கு தானா என்றும் பரபரப்பாக பேசப்படுகிறது.