பக்கங்கள்

பக்கங்கள்

27 மார்., 2016

தேர்தல் விதிகளை மீறியதாக பிரேமலதா மீது வழக்குப்பதிவு



நெல்லையில் வாக்காளர்களை பணம் வாங்க தூண்டியதாக பிரேமலதா மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

நெல்லை தேரடி திடலில் வெள்ளிக்கிழமை நடந்த தேமுதிக பொதுக்கூட்டத்தில் பிரேமலதா கலந்து கொண்டு பேசுகையில், அரசியல் கட்சிகள் வாக்களிக்க கொடுக்கும் பணத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். அதிகபட்சம் ஒரு லட்சம் வரை கேட்க வேண்டும் என்று பேசினார். பிரேமலதாவின் இந்த பேச்சு தேர்தல் விதிமுறைகளுக்கு முரணானது என வட்டாட்சியர் மரகதநாதன் கொடுத்த புகாரின் பேரில் நெல்லை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.