பக்கங்கள்

பக்கங்கள்

9 மார்., 2016

கிளிநொச்சியில் ஒன்றிணைந்த பொது அமைப்புக்களால் போராட்டத்திற்கு அழைப்பு


சிறீலங்காவினுடைய அரச சிறைகளில் பல ஆண்டுகளாக அடைக்கப்பட்டு விடுதலையின்றி உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமொன்று கிளிநொச்சியில் இடம்பெறவுள்ளது.
மக்கள் அமைப்புக்களின் மனிதச் சங்கிலிப் போராட்டமாக நடைபெறவுள்ள இப் போராட்டமானது, 2016.03.10 காலை 8.00 முதல் நடைபெறவுள்ளது.
இப்போராட்டத்திற்கான அழைப்பை கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்கள் விடுத்திருக்கின்றன.
ஆசிரிய சங்கங்கள், வர்த்தக சங்கங்கள், போக்குவரத்து அமைப்புக்கள் கூட்டுறவாளர்கள், பாடசாலைச்சமூகம் என்பவை ஒன்றிணைந்து இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இப்போராட்டத்திற்கு பூரண ஆதரவை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்டக் கிளையும் வழங்கியிருக்கிறது.
அலை அலையாக மக்களை அணிதிரண்டு சாவின் விளிம்பில் சந்தன துகள்களாக கரைகின்ற சகோதரர்களின் விடுதலைக்கு ஒன்றிணைந்து போராடுவோம் என இவ் அமைப்பினர் அறைகூவல் விடுத்துள்ளனர்.