பக்கங்கள்

பக்கங்கள்

9 மார்., 2016

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வவுனியா இளைஞன் தடுத்து வைப்பு


வவுனியா நெடுங்கேணியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
தேவராஜா சின்ன கனோஜி என்ற 27 வயதான இளைஞரே இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
பிரித்தானியா செல்வதற்காக குவைத் நாட்டிற்கு சென்றிருந்த வேளை  இன்று காலை அங்கிருந்து மீண்டும் இலங்கை திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமான முறையில் பிரித்தானியாவிற்கு செல்ல முயற்சித்த குற்றச்சாட்டிலேயே இவர் இலங்கைக்கு மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.