பக்கங்கள்

பக்கங்கள்

16 மார்., 2016

”இந்தியாவை வீழ்த்தினால் நிர்வாண நடனம் ” பாகிஸ்தான் நடிகை

டி20 உலகக்கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் அணி, இந்தியாவை வீழ்த்தினால் நிர்வாணமாக நடனம் ஆடத்தயார் என்று கூறி பாகிஸ்தான் நடிகை குவான்டீல் பலூச் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
பாகிஸ்தான் நாட்டு தொலைக்காட்சி நடிகையான குவான்டீல் பலூச் என்பவர் அடிக்கடி ஏதாவது செய்து விளம்பரம் தேடிக் கொள்வார். அவர் சில தினங்களுக்கு முன்பு இந்திய பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்தும், மிரட்டல் விடுத்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இது இணையத்தில் வைரல் ஆனது.
அதேபோல் ஆசியக்கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் தோற்றதையடுத்து அணித்தலைவர் அப்ரிடியை பைத்தியம் என்று கடுமையாக திட்டி ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். இந்நிலையில் குவான்டீல் பலூச் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அதில், டி20 உலகக்கிண்ணத் தொடரில் இந்தியாவை பாகிஸ்தான் அணி வீழ்த்தி விட்டால் முழுதேசத்திற்காகவும் நிர்வாண நடனம் ஆடத்தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், பாகிஸ்தான் அணித்தலைவர் அப்ரிடி பாகிஸ்தான் அணிக்கு வெற்றி தேடித்தந்தால் அவர் என்ன கூறினாலும் அதை செய்வேன் என்றும் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த 2011ம் ஆண்டு இந்தியா உலகக்கிண்ணம் வென்றால் நிர்வாணம் போஸ் கொடுப்பதாக இந்திய நடிகை பூணம் பாண்டே அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார், அதே பாணியில் இப்போது குவான்டீல் பலூச்சும் அறிவித்துள்ளார். டி20 உலகக்கிண்ணத் தொடரில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் ஆட்டம் எதிர்வரும் 19ம் திகதி ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கிறது.