பக்கங்கள்

பக்கங்கள்

13 ஏப்., 2016

கீரிஸில் இருந்து இலங்கையர்கள் நால்வர் துருக்கிக்கு நாடு கடத்தல்

சர்ச்சைக்குரிய குடியேறிகளை கட்டுப்படுத்தும் திட்டத்தின் கீழ் கீரிஸின் இரண்டு தீவுகளில் இருந்து, நான்கு இலங்கையர்கள் துருக்கிக்கு
நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
திருப்பி அனுப்பப்பட்ட இலங்கையர்கள் உட்பட்ட 202 குடியேறிகளில் 11 நாட்டவர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான், இந்தியா உட்பட்ட நாடுகளின் குடியேறிகளும் இதில் அடங்கியுள்ளனர்.
சிரியாவின் உள்நாட்டு போரை அடுத்து பெருமளவானோர் துருக்கிக்கு சென்று அங்கிருந்து கீரிஸிக்குள் குடியேறிகளாக சென்றனர்.
இது குறித்து குடியேறிகள் ஐரோப்பாவுக்கு செல்வதற்கு இலகுவழியை ஏற்படுத்திவிடும் என்ற அச்சத்தில் நேர்மையற்ற அகதிகளை வெளியேற்றும் உடன்படிக்கையை கீரிஸிம், துருக்கியும் அண்மையில் செய்துக்கொண்டன.
இதனடிப்படையில் இலங்கையர்கள் நால்வர் திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்