பக்கங்கள்

பக்கங்கள்

3 ஏப்., 2016

தலைவரது உடலம் புதைக்கப்பட்டது! எரியூட்டப்படவில்லை!- சரத் பொன்சேகா


விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடலம் எரியூட்டப்படவில்லை. பதிலாக அவரின் உடலம் புதைக்கப்பட்டதாக முன்னாள் இராணுவ தளபதியும் பீல்ட் மார்ஷலுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பிரபாகரனின் உடலம் இறுதிப் போரின் போது நந்திக்கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது
இந்தநிலையில் அந்த உடலம் எரியூட்டப்பட்டதாக முன்னாள் இராணுவத் தளபதிகளில் ஒருவரான தயா ரட்நாயக்க தெரிவித்திருந்தார்.
அத்துடன் பொட்டு அம்மானின் உடலமும் எரியூட்டப்பட்டு அதன் பகுதி கடலில் வீசப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தார்.
எனினும் ரட்நாயக்கவின் தகவலை, சரத் பொன்சேகா மறுத்துள்ளார்.
ரட்நாயக்க, குறித்த நேரத்தில் போர்க்களத்தில் இருக்கவில்லை என்று சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்