பக்கங்கள்

பக்கங்கள்

2 ஏப்., 2016

பசில் நிதி மோசடி செய்தமை உறுதி .கைதாவாரா ?


முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச மேற்கொண்ட ஹெலிகொப்டர் பயணங்களுக்கு திவி நெகும திட்டத்தின் ஊடாக பணம் செலுத்தப்பட்டுள்ளது.
விமானப் படைக்குச் சொந்தமான விமானங்களைப் பயன்படுத்தி பசில் ராஜபக்ச உள்நாட்டு ரீதியான பயணங்களை மேற்கொண்டிருந்தார்.
பல கோடி ரூபா இவ்வாறு செலுத்தப்பட்டுள்ளது. பாரிய நிதி மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளின் போது இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர் பீ.பி.ஜயசுந்தரவிடம் நேற்று விசாரணை நடத்தப்பட்டிருந்தது.
இந்த விசாரணைகளின் போது பசில் பாரியளவில் நிதி மோசடிகளில் ஈடுபட்டமை தெரியவந்துள்ளது.