பக்கங்கள்

பக்கங்கள்

2 ஏப்., 2016

ஜி.எல்.பீரிஸ் சீஐடி தலைமையகத்தில் முன்னிலை


முன்னாள் அமைச்சர் ஜி எல் பீரிஸ் சற்றுமுன்னர் கொழும்பு சீஐடி தலைமையகத்தில் முன்னிலையானார்.
யாழ். சாவகச்சேரியில் அண்மையில் மீட்கப்பட்ட வெடிப்பொருட்கள் தொடர்பில் அவர் வெளியிட்ட கருத்து தொடர்பில் வாக்குமூலம் வழங்கவென்று அவர் இன்று சீஐடிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இதன் அடிப்படையிலேயே அவர் அங்கு சென்றுள்ளார்.
சாவகச்சேரியில் மீட்கப்பட்ட வெடிப்பொருட்கள், வெள்ளவத்தைக்கு கொண்டு வரப்படுவதற்காக வைக்கப்பட்டிருந்திருக்கலாம் என்று கருத்தை பீரிஸ் செய்தியாளர்களை அவசரமாக சந்தித்து தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் தேசிய பாதுகாப்பு என்ற அடிப்படையில் ஜி எல்லின் கருத்து பாரதூரமானது என்று கருதியே அவரின் வாக்குமூலம் இன்று பெறப்படுகிறது.