பக்கங்கள்

பக்கங்கள்

13 ஏப்., 2016

மக்கள் தேமுதிகவுக்கான தொகுதிகள், வேட்பாளர்கள் அறிவிப்பு



திமுக தலைவர் கலைஞரை, மக்கள் தேமுதிக ஒருங்கிணைப்பாளர் வி.சி.சந்திரகுமார் மற்றும் நிர்வாகிகள் சந்தித்துப் பேசினர். 

இதில் திமுக கூட்டணியில் ஈரோடு கிழக்கு, கும்மிடிப்பூண்டி, மேட்டூர் தொகுதிகள் மக்கள் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டது. 3 தொகுதிகளிலும் மக்கள் தேமுதிக வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார்கள் என உடன்பாடு ஏற்பட்டுள்ளது. 

அதன்படி ஈரோடு கிழக்கில் சந்திரகுமார், கும்மிடிப்பூண்டியில் சேகர், மேட்டூரில் பார்த்திபன் ஆகியோர் போட்டியிடுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.