பக்கங்கள்

பக்கங்கள்

14 ஏப்., 2016

அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனை எதிர்க்கும் சரத்குமார்



திருச்செந்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக சரத்குமார் (சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர்) போட்டியிடுகிறார். இந்த நிலையில் திமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியானது. திருச்செந்தூர் தொகுதியில் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளார். 

2001 மற்றும் 2006ல் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், பின்னர் திமுகவில் இணைந்தார். அப்போது 2008ல் நடந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து 2011ல் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் தென்காசி தொகுதியில் சரத்குமார் போட்டியிட்டார்.