பக்கங்கள்

பக்கங்கள்

25 ஏப்., 2016

இனி என் ஊர் இது தான்: அதிமுகவில் சேர்ந்ததற்கான காரணத்தை கூறுகிறார் நமீதா

271981585nameethaதமிழக தேர்தல் களம் மிகவும் பரபரப்பாக சுழன்று கொண்டிருக்கும் வேளையில் அரசியலில் குதித்துள்ளார் நடிகை நமீதா. நீண்ட நாட்களாக
நான் அரசியலுக்கு வந்து மக்களுக்கு சேவை செய்வேன் என கூறிவந்த நமீதா அதிமுகவில் சேர்ந்தார்.முதலமைச்சரும், பொதுச்செயலாளருமான ஜெயலலிதா முன்னிலையில் தன்னை அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக்கொண்டார் நமீதா. தமிழை தாய் மொழியாக கொண்டிராத, குஜராத்தை சேர்ந்த நமீதா திராவிட கட்சியான அதிமுகவை தேர்ந்தெடுத்து அந்த கட்சியில் சேர்ந்தது பலருக்கும் அதிர்ச்சியை அளித்தது.
இது குறித்து கூறிய நடிகை நமீதா, தான் தேர்தலுக்காக அதிமுகவில் சேரவில்லை என்றும், ஜெயலலிதாவின் ஆட்சி முறை, அவரது தலைமை, எல்லா சூழலிலும் உறுதியாக இருக்கும் மன தைரியம் எனக்கு பிடிக்கும் என்று கூறியுள்ளார். என்னுடைய அரசியல் வழிகாட்டி அவர் தான். நான் மக்களுக்கு சேவை செய்ய இருப்பதாக அறிவித்ததும், பல கட்சிகள் என்னை தொடர்பு கொண்டு தங்கள் கட்சியில் சேர்க்க முயன்றார்கள்.
ஆனால் அதிமுகவில் தான் சேர வேண்டும் என முடிவெடுத்து, நானே விரும்பி கடிதம் கொடுத்து, அம்மாவின் அழைப்புக்கு காத்திருந்து அதிமுகவில் சேர்ந்துள்ளேன் என்றார்.
மேலும், நான் நீண்ட நாட்களாகவே சென்னையில் செட்டிலாகிவிட்டேன், என் வீடு சென்னையில் தான் உள்ளது. என் ரேஷன் கார்டு சென்னையில் தான் இருக்கிறது. நான் வாக்களிப்பதும் சென்னையில் தான். எல்லாமே எனக்கு சென்னைதான். இதுதான் இனி என் ஊர் என எப்போதோ முடிவு செய்துவிட்டேன் என கூறினார் நமீதா