பக்கங்கள்

பக்கங்கள்

2 ஏப்., 2016

கனடாவில் ஹொட்டல் ஒன்றுக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பாக இலங்கையர் ஒருவர் கைது

கனடாவில் ஹொட்டல் ஒன்றுக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பாக இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜெயகுமார் சண்முகநாதன் என்ற இந்த நபர், இலங்கைக்கு புறப்பட்டு வர தயாரான நிலையில், டொரண்டோ விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. 2009ம் ஆண்டு வுடஸ்டொக் பிரதேசத்தில் உள்ள ஹொட்டலை தீ வைத்தாக சந்தேக நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக 2014ம் ஆண்டு நான்கு பேர் கைது செய்யப்பட்டதுடன் இலங்கை நபருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
வடஸ்டொக் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை நபர், தடுப்பு முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.