பக்கங்கள்

பக்கங்கள்

14 ஏப்., 2016

வீரவன்ஸவுக்கு கசந்தாலும் ரணிலின் மருந்து சிறந்தது: ஹரின்

விமல் வீரவன்ஸ போன்றவர்கள் கசப்பாக இருக்கின்றது என கூறினாலும் மருத்துவர் ரணிலின் மருந்து மிகவும் சிறந்தது என அமைச்சர் ஹரின்
பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மருத்துவர் ரணில் விக்ரமசிங்க ஜனநாயகத்தையும் முன்னேற்றத்தையும் ஏற்படுத்த கொண்டு வரும் மருந்து வீரவன்ஸ போன்றோர் கசப்பாக இருக்கின்றது என்று கூறினாலும் அது சிறந்த மருந்தாகும்.
நாட்டை கடன் பொறியில் இருந்து காப்பாற்றி முன்னோக்கி செல்ல மேற்கொள்ளும் முயற்சியை சீர்குலைக்க வேண்டாம் என நாம் அவர்களை கேட்டுக்கொள்கிறோம்.
நாங்கள் நாட்டின் கடன் பொறியை இல்லாமல் செய்வோம். பிரதமருக்கு மருத்துவம் நன்றாக தெரியும் எனவும் ஹரின் பெர்னாண்டோ கூறியுள்ளார்