பக்கங்கள்

பக்கங்கள்

13 ஏப்., 2016

வரலாற்று சாதனைக்கு சொந்தக்காரனாகிய இலங்கைத் தமிழர்!


கனடாவில் வசித்து வரும் இலங்கை தமிழ் இளைஞன் ஒருவர், தனது அபாரமான ஹொக்கி விளையாட்டு திறமையினால் மிகப் பெரிய உதவித் தொகையினை பெற்று, கௌரவிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம், ஓண்டாரியோ மாகாணத்திர் தேசிய ஹொக்கி லீக் விளையாட்டு போட்டிற்காக உதவித்தொகை பெறும் முதலாவது இலங்கைத் தமிழர் என்ற பெறுமையை இவர் பெற்றுள்ளார்.

இலங்கை நாட்வரான 17 வயதுடைய பிரசாந்தன் அருச்சுனன் சிறு வயதிலேயே தனது குடும்பத்திருடன் கனடாவின் ரொறொன்ரோ நகரில் குடியேறினர். சிறு வயதிலிருந்தே ஹொக்கியில் ஆர்வம் காட்டி வரும் அவர், தனது திறமையின் மூலம் தான் கல்வி கற்கும் பாடசாலைக்கும், கழகத்திற்கும் பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார்.

இந்நிலையில், பிரசாந்தனின் அபாரமான திறமைகளை கண்டு வியந்த கல்லூரி பிரசாந்தனை ஊக்கப்படுத்தும் விதத்தில் அவருக்கு உதவித்தொகை அளிக்க முன் வந்துள்ளது. இந்த தகவலை அறிந்த பிரசாந்தன் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்றுள்ளார்.

இது குறித்து பிரசாந்தன் கருத்து தெரிவிக்கும்பொழுது,‘தேசிய ஹொக்கி லீக் உதவித்தொகை கிடைத்தமையை, எனது கடுமையான முயற்சிக்கு கிடைத்த பரிசாக நினைக்கிறேன். நான் ஹொக்கி கற்றுக்கொள்ளும் ஹீரோஸ் பயிற்சி மையம் மற்றும், பயிற்சிவிப்பாளர டோனி வ்ரே என்பவர் என பல தரப்பினரும் எனது முன்னேற்றத்திற்கு நம்பிக்கை ஊட்டினர்.

ஹொக்கி விளையாட்டு போட்டியில் சுமார் 94 சதவிகித சராசரி புள்ளிகளை பெற்றுள்ளதால் இப்போது என்னுடைய திறமைகளுக்காக தேசிய ஹொக்கி லீக் உதவித் தொகை கிடைத்துள்ளது. இந்த உதவித் தொகையை பயன்படுத்தி வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் சேர்ந்து இயந்திர பொறியியல் படிப்பேன்.

இந்த படிப்பின் மூலம் ஒரு நாள் ‘இரு எரிபொருள் மூலம் பறக்கும் விமானத்தை முதன் முதலாக வடிவமைத்தவன்’ என்ற பெருமையை நிச்சயமாக பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது’ என்றும் தெரிவித்துள்ளார்.