பக்கங்கள்

பக்கங்கள்

6 மே, 2016

கூடங்குளத்தில் 5, 6ஆவது அணு உலை: ரஷியாவுடன் பேச்சுவார்த்தை; மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்

கூடங்குளத்தில் 5, 6ஆவது அணு உலைகளை நிறுவும் ஒப்பந்தம் தொடர்பாக ரஷியாவுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி
வருவதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்தது.
 இது குறித்து மாநிலங்களவையில் உறுப்பினர்கள் எழுப்பியிருந்த கேள்விகளுக்கு பிரதமர் அலுவலகம், அணுசக்தித் துறைக்கான மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் வியாழக்கிழமை அளித்துள்ள எழுத்துப்பூர்வ பதில் வருமாறு: 
 கூடங்குளத்தில் 3, 4, 5, 6 ஆகிய அணு உலைகள் அமைக்கும் ஒப்பந்தத்தை ரஷியாவுடன் இந்தியா 2008ஆம் ஆண்டு மேற்கொண்டது. தொழில்நுட்ப ஒத்துழைப்பு அடிப்படையில் இந்த ஒப்பந்தம் மேற்காள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து, கூடங்குளத்தில் 5, 6ஆவது அணு உலைகளை நிறுவும் ஒப்பந்தம் தொடர்பாக ரஷியாவுடன் மத்திய அரசு பேச்சு நடத்தி வருகிறது. இந்தத் திட்டத்துக்கு ஆகும் செலவினம் தொடர்பாக ரஷியாவுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதன் முடிவில்தான் திட்டத்துக்கான மொத்த மதிப்பீடு என்ன என்பது தெரிய வரும் என்று ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.