பக்கங்கள்

பக்கங்கள்

6 மே, 2016

நகைகள் தென்படாததால் கைவிடப்பட்டது தேடும் படலம்!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் நடாத்தப்பட்ட தமிழீழ வைப்பகத்தின் நகைகள் அடங்கிய இரும்புப் பெட்டகம் புதைக்கப்பட்டதாகக்
கருதப்படும் கிணற்றைத் தோண்டும் பணி தோல்வியில் முடிந்தமையினால் முயற்சி கைவிடப்பட்டது.
தமிழீழ வைப்பகம் அமைந்திருந்த பிரதேசத்தின் முன்னால் இருந்த வெற்றுக் காணியில் அமைந்திருந்த ஓர் கிணற்றினுள் போடப்பட்டு மூடியதாக கிடைத்த தகவலின் பிரகாரம் பொலிசாரினால் நீதிமன்ற அனுமதி பெறப்பட்டு கடந்த வாரம் முதல் இரு கட்டங்களாக குறித்த பகுதி தோண்டப்பட்டது .
இவ்வாறு தோண்டும் படலம் ஆரம்பிக்கும் வேளையில் பயன்படுத்திய பைக்கோ ரக வாகனத்தின் துலா நீளம் போதாமை காரணத்தினால் இதன் மூலம் அதிக தூரம் தோண்டி சோதனை இட முடியாத சூழல் காணப்பட்டது.
இதன் காரணத்தினால் தேடும் படலம் இடை நிறுத்தப்பட்டு பொலிசாரின் பாதுகாப்பு போடப்பட்டது. இதன் பிற்பாடு  நேற்றுமுன்தினம்   பாரிய பைக்கோ இயந்திரம் ஒன்று கொழும்பில் இருந்து தருவிக்கப்பட்டு கிணற்றினை தோண்டும் பணிகள் மீண்டும்  ஆரம்பிக்கப்பட்டது.
இப்பணிகள்  இடம்பெற்ற வேளையில்  மாவட்ட நீதிபதி , பொலிசார், பிரதேச செயலாளர்,  கிராமசேவகர், இராணுவத்தினர் மற்றும் ஓர் பௌத்த மதகுரு ஆகியோர் அங்கு பிரசன்னமாகியிருந்தனர்.
இருப்பினும் இருகட்டமாக  தோண்டப்பட்ட பிரதேசத்தில் இருந்ததாக கருதப்படும் கிணறு இனம் காணப்பட்டபோதும் குறித்த கிணற்றில் இருந்து எந்தவிதமான மெறுமதியான பொருட்களும் மீட்கப்படவில்லை. இதன் காரணத்தினால் குறித்த பணிகள் நேற்றுடன் கைவிடப்பட்டுள்ளது.