பக்கங்கள்

பக்கங்கள்

23 மே, 2016

சுவிட்ஸர்லாந்தில்9ஆவது உலக சுகாதார மாநாடு

உலக சுகாதார மாநாடு 69ஆவது தடவையாக இன்றைய தினம் சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவா நகரில் இடம்பெறவுள்ளது.

“நிலையான வளர்ச்சிக்கு 2030 இல் உலகை தயார்படுத்தல்” என்ற தொனிப் பொருளின் கீழ் இம்முறை குறித்த மாநாடானது இன்று தொடக்கம் எதிர்வரும் 28ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, செயலாளர் அனுர ஜயவிக்கிரம, சுகாதார பணிப்பாளர் பாலித மஹிபால உள்ளிட்ட 14 பேர் நேற்று முன்தினம் சுவிட்ஸர்லாந்து சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை குறித்த மாநாட்டில் கலந்துக் கொள்ளும் ஏனைய நாட்டு சுகாதார பிரதிநிதிகளுடன் இலங்கையின் சுகாதார அபிவிருத்தி தொடர்பிலும் கலந்துரையாடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.