பக்கங்கள்

பக்கங்கள்

23 மே, 2016

ஜெ. பதவியேற்பு விழா: ஸ்டாலின் பங்கேற்கிறார்


தமிழக முதல் அமைச்சராக ஜெயலலிதா இன்று பதவியேற்கிறார். சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் ஜெ. உள்ளிட்ட 19 அமைச்சர்களின் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. ஆளுநர் ரோசய்யா பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைக்கிறார். இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள் வெங்கையா நாயுடு, நிர்மலா சீதாராமன் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரும் கலந்து கொள்ள உள்ளனர். 

பதவி ஏற்பு விழா நடக்கும் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் அனைவரும் பலத்த சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.