பக்கங்கள்

பக்கங்கள்

6 மே, 2016

ஜெயலலிதாவின் தேர்தல் அறிக்கையில் தனி ஈழம், இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை


இலங்கையில் தனி ஈழம் எய்திடும் வகையில் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தனது தேர்தல்
அறிக்கையில் கூறியுள்ளார்.
அ.தி.மு.க பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா நேற்று ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை பெருந்துறையில் வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டு வைத்த குறித்த தேர்தல் அறிக்கையிலேயே இந்த விடயம் கூறப்பட்டுள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன் தமிழ்நாட்டில் முகாம்களிலும், முகாம்களுக்கு வெளியேயும் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் எனவும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.