பக்கங்கள்

பக்கங்கள்

27 மே, 2016

இலங்கைத் தமிழர்கள் நிரந்தரமான தீர்வைப் பெறுவதற்கான தன்னுடைய பணி தொடரும்: கலைஞர் கடிதம்



திமுக தலைவர் கலைஞர் 13வது முறையாக சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பதற்கு வாழ்த்து தெரிவித்து, இலங்கை பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவருமான இரா.சம்பந்தன் கடிதம் எழுத்தியிருந்தார்.

இதற்கு நன்றி தெரிவித்து இரா.சம்பந்தனுக்கு கலைஞர் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், இலங்கைத் தமிழ் மக்களுடைய பிரச்சனைக்கு நியாயமான, நிரந்தரமான அரசியல் தீர்வைப் பெறுவதற்கு தன்னுடைய பணி தொடரும் என்று உறுதி அளிப்பதாக கூறியுள்ளார்.