பக்கங்கள்

பக்கங்கள்

27 மே, 2016

மம்தா பானர்ஜியின் பதவி ஏற்பு விழாவில் தி.மு.க. சார்பில் கனிமொழி எம்.பி. பங்கேற்பு

தி.மு.க. சார்பில் கனிமொழி எம்.பி. மம்தா பானர்ஜி பதவியேற்கும் விழாவில் கலந்து கொள்கிறார்.

மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரியாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர், மம்தா பானர்ஜி 2-வது முறையாக மே 27-ந் தேதி (இன்று) கொல்கத்தாவில் பதவியேற்கிறார்.
மம்தா பானர்ஜிக்கு ஏற்கனவே தி.மு.க. தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்திருக்கிற நிலையில், அவர் பதவியேற்கும் விழாவில் கலந்து கொள்ள தி.மு.க.வுக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருக்கிறது.
அதன் அடிப்படையில் தி.மு.க. சார்பில் கட்சியின் மகளிரணிச் செயலாளரும், மாநிலங்களவை தி.மு.க. குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி. மம்தா பானர்ஜி பதவியேற்கும் விழாவில் கலந்து கொள்கிறார்.
இதற்காக கனிமொழி கொல்கத்தா புறப்படுகிறார்.
மேற்கண்ட தகவல் கனிமொழி எம்.பி. அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.