பக்கங்கள்

பக்கங்கள்

20 மே, 2016

நடுவானில் வெடித்து சிதறியது விமானம்!

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இருந்து எகிப்து ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று எகிப்து தலைநகர் கெய்ரோவிற்கு நேற்று காலை சென்றுகொண்டிருந்தது. 56 பயணிகள், 10 விமான ஊழியர்கள் என மொத்தம் 66 பேர் விமானத்தில் இருந்தர். விமானம் எகிப்திய வான் எல்லைக்குள் நுழைந்தபோது திடீரென ரேடாரில் இருந்து மாயமானது. அலெக்சாண்டரியாவின் மத்திய தரைகடல் பகுதியில் நடுவானில் விமானம் வெடித்து சிதறியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ரேடாரில் இருந்து மாயமான 2 மணி நேரம் கழித்து விமானத்தில் இருந்து அபாய அழைப்பு வந்ததாகவும் அது குறித்து விசாரித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எகிப்து ராணுவம் மற்றும் மீட்பு குழுவினர் எகிப்து கடற்கரையின் வடக்கு பகுதியில் பாகங்களை கண்டுபிடித்துள்ளனர். 

கிரீஸ் நாட்டின் விமானங்கள் மற்றும் கடற்படை கப்பல்களும் எகிப்து ராணுவத்துடன் சேர்ந்து பயணிகளை தேடும் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளன. பிரான்ஸ் வெளியுறவு துறை அமைச்சர் ஜீன் மார்க்கும், ராணுவ விமானங்கள் மற்றும் படகுகளை தேடுதல் பணியில் ஈடுபடுத்துவதற்கு உத்தர விட்டுள்ளார்.