பக்கங்கள்

பக்கங்கள்

3 மே, 2016

பாராளுமன்றில் மஹிந்த அணியினர், பொன்சேகா மோதல்! சமரசிங்க வைத்தியசாலையில்

மஹிந்தவின் பாதுகாப்பு தொடர்பாக ஏற்பட்ட பேச்சுவார்த்தை வாய்த்தர்க்கமாக மாறி அடிதடியில் முடிந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பாராளுமன்றில் மஹிந்த அணியினர், பொன்சேகா மோதல்! சமரசிங்க வைத்தியசாலையில் - 3 Photos

மேலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு குறித்து, பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவினால் தெரிவிக்கப்பட்ட சில கருத்துக்கள் காரணமாகவே இந்த குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த அடிதடியானது, ஆளும் கட்சியினருக்கும் மஹிந்த ஆதரவணியினருக்கும் இடையிலேயே இடம்பெற்றுள்ளது.
இதனடிப்படையில், பாராளுமன்றை சபாநாயகர் சற்று நேரம் ஒத்திவைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியசாலையில்
பாராளுமன்றத்தில் சற்றுமுன்னர் இடம்பெற்ற கைகலப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் கேகாலை மாவட்ட உறுப்பினர் சந்தித் சமரசிங்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாராளுமன்ற எதிரணியின் சில உறுப்பினர் குறித்த பாராளுமன்ற உறுப்பினரை நிலத்தில் தள்ளி வீழ்த்தி தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.