பக்கங்கள்

பக்கங்கள்

3 மே, 2016

CCTV கேமராவில் பதிவான வீடியோ வெளியீடு: இளம்பெண்ணை கடத்தி பலாத்காரம் செய்ய முயற்சி செய்தவர் கைது


பெங்களூருவில் இளம்பெண்ணை கடத்தி பலாத்காரம் செய்ய முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர். மேலும், இளம்பெண்ணை கடத்திய சம்பவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த 24 வயதுடைய பெண் பெங்களூரு சி.கே.அச்சுக்கட்டு போலீஸ் நிலையத்திற்கு கத்திரிகுப்பேயில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கி, அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த மாதம் (ஏப்ரல்) 23–ந் தேதி இரவு தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று விட்டு கத்திரிகுப்பே மெயின் ரோட்டில் வந்து இறங்கினார்.

பின்னர் அவர் தங்கும் விடுதிக்கு செல்வதற்காக சாலையோரம் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு மர்மநபர் திடீரென்று அவரை குண்டு கட்டாக தூக்கி கடத்தி சென்றார். பின்னர் அதே பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து மர்மநபர் பலாத்காரம் செய்ய முயன்றார்.

ஆனால் அவர் மர்மநபரின் பிடியில் இருந்து தப்பிக்கவே முயற்சி செய்த வண்ணம் இருந்தார். மேலும் சத்தம் போட்டு கூச்சலிட்டார். இதனால் ஆத்திரமடைந்த மர்மநபர் அப்பெண்ணை அடித்து உதைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. அதன்பிறகு, மர்மநபரிடம் இருந்து எப்படியோ அப்பெண் தப்பி ஓடிவிட்டார்.

பின்னர் நடந்த சம்பவங்கள் பற்றி சி.கே.அச்சுக்கட்டு போலீஸ் நிலையத்தில் புகார் செய்ததாகவும், ஆனால் அந்த புகாரை போலீசார் வாங்க மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், மர்மநபர் கடத்த முயற்சி செய்யும் காட்சிகள் கத்திரிகுப்பே மெயின் ரோட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

அந்த காட்சிகள் நேற்று தனியார் கன்னட தொலைகாட்சிகளில் வெளியானது. இந்த நிலையில் தலைமறைவாக உள்ள மர்மநபரை பிடிக்க தெற்கு மண்டல துணை கமிஷனர் லோகேஷ் மேற்பார்வையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் மர்மநபரை வலைவீசி தேடினர். இந்நிலையில் மர்மநபர் கைது செய்யப்பட்டார். 

துணை போலீஸ் கமிஷனர் லோகேஷ் குமார் பேசுகையில், ”இச்சம்பவம் தொடர்பாக ஒருவனை கைது செய்து உள்ளோம். அவனது பெயர்  அக்ஷய். அவனே குற்றவாளி,” என்று கூறிஉள்ளார்.