பக்கங்கள்

பக்கங்கள்

23 மே, 2016

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஆர்எல்வி-டிடி விண்கலம்




முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரான ஆர்எல்வி- டிடி விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ஆர்.எல்.வி. விண்கலம் சோதனை வெற்றி பெற்றுள்ளது என இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

இந்த விண்கலம் 1.75 டன் எடை கொண்டது. ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஸ்தவான் ஏவுதளத்தில் இருந்து ஆர்.எல்.வி., விண்கலம் விண்ணில் பாய்ந்தது. பூமியிலிருந்து 70 கி.மீ., தூரம் சென்றபின் வங்கக்கடலில் விழுந்தது. 

இந்தியா உருவாக்கியுள்ள இந்த விண்கலம், முதன்முறையாக இன்று விண்ணில் ஏவப்பட்டு பரிசோதிக்கப்படுகிறது. இது, 70 கி.மீ., தூரம் வரை சென்று திரும்பக் கூடியது.இந்த விண்கலம் பூமியை வந்தடைந்த பின், அதனுடைய ஆய்வு தொடரும். செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ அனுப்பப்பட்ட விண்கலங்கள், தங்கள் வேலை முடிந்ததும் விண்வெளியிலேயே எரிந்து மறைந்து விடும். ஆனால், இஸ்ரோ உருவாக்கியுள்ள புதிய ஆர்.எல்.வி., விண்கலம், பூமிக்கு திரும்பி, மறு பயன்பாட்டுக்கு உதவக் கூடியது.

ஐந்து ஆண்டுகளாக, இந்திய விஞ்ஞானிகளின் தீவிர முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ள இதுபோன்ற விண்கலத்தை, இதுவரை அமெரிக்கா மட்டுமே பயன்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.