பக்கங்கள்

பக்கங்கள்

10 மே, 2016

சம்பந்தனுடன் நீண்டநேரம் உரையாடிய ஜனாதிபதி மைத்திரிபால

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனுடன்
நேற்று நீண்டநேரம் உரையாடியுள்ளார்.
நீதி அமைச்சர் விஜேயதாஸ ராஜபக்சவின் புதல்வரது திருமண வைபவம் நேற்று கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்த திருமண வைபவத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பாரியார் சகிதம் கலந்துகொண்டார்.
இந்நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் அமைச்சர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, வஜிர அபேவர்தன, விஜித் விஜயமுனி சொய்சா, பாலித்த ரங்கே பண்டார, நிமல் சிறிபால டி சில்வா, திருமதி விஜயகலா மகேஸ்வரன் உட்பட பெருமளவானோர் பங்கேற்றிருந்தனர்.
முற்பகல் 11 மணியளவில் திருமண வைபவத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனுக்கு அருகில் சென்றுஅமர்ந்துகொண்டார்.
இந்த வைபவத்திலேயே நீண்டநேரம் இருவரும் உரையாடியுள்ளனர்