பக்கங்கள்

பக்கங்கள்

20 ஜூன், 2016

யூரோ கால்பந்து போட்டி அல்பேனியா அணியிடம் ருமேனியா 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வி!



 யூரோ கால்பந்து போட்டி  ‘ஏ’ பிரிவில் ருமேனியா - அல்பேனியா அணிகள் போட்டியிட்டன. இதில் ருமேனியா 0-1 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சிகரமாக தோல்வி அடைந்தது. ஆட்டத்தின் 43-வது நிமிடத்தில் அல்பேனியா வீரர் அர்மண்டோ ஷாடிகு கோல் அடித்தார். இறுதி வரை ருமேனியா அணியால் பதில் கோல் அடித்து சமன் செய்ய இயலவில்லை. இந்த தோல்வி மூலம் ருமேனியா போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டது. அந்த அணி 3 ஆட்டத்தில்  1 டிரா, 2 தோல்வி மூலம் 1 புள்ளிகள் பெற்று ‘ஏ’ பிரிவில் கடைசி இடத்தை பிடித்தது.

அல்பேனியா 1 வெற்றி, 2 தோல்வியுடன் 3 புள்ளிகள் பெற்று அந்த பிரிவில் 3-வது இடத்தை பிடித்தது. சிறந்த 3-வது அணியில் இருந்து 4 நாடுகள் நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறும். இதனால் அல்பேனியா மற்ற பிரிவுகளில் உள்ள 3-வது இடங்களை பிடிக்கும் அணிகளின் முடிவுக்காக காத்திருக்கிறது.