பக்கங்கள்

பக்கங்கள்

20 ஜூன், 2016

காணாமற் போனோர் அறிக்கை 15ஆம் திகதி ஜனாதிபதியிடம்

காணாமல் போனோர் தொடர்பிலான முறைப்பாடுகளை விசாரணைகளை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் ஜூலை 15ம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக தெரியவந்துள்ளது. 

இலங்கையின் யுத்த காலப் பகுதியில் காணாமல் போனோர் தொடர்பிலான முறைப்பாடுகள் குறித்து ஆராய, கடந்த ஆட்சிக் காலத்தில், மெக்ஸ்வெல் பரணகம தலைமையில் ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட்டது. 

குறித்த குழு வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள மக்களின் முறைப்பாடுகளைப் பதிவு செய்து சாட்சி விசாரணைகளை முன்னெடுத்ததோடு, குறித்த விசாரணைகள் தற்போது நிறைவடைந்துள்ளன. 

இதன்படி, இந்த விசாரணைகள் தொடர்பான அறிக்கை தயாரிக்கும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக, ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்தநிலையில் குறித்த அறிக்கையை எதிர்வரும் ஜூலை 15ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.