பக்கங்கள்

பக்கங்கள்

20 ஜூன், 2016

மாணவி துஷ்பிரயோகம் ்அதிபர் உட்பட ஐவர் விளக்கமறியலில்

வரணி பகுதியிலுள்ள பாடசாலையில் கல்வி கற்கும் 12 வயது மாணவியொருவரை துஷ்பிரயோகம் செய்த சம்பவத்துடன் தொடர்புடைய அப்பாடசாலையின்
அதிபர் உள்ளிட்ட 5 பேரை எதிர்வரும் ஜூலை மாதம் 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன் ஞாயிற்றுக்கிழமை (19) உத்தரவிட்டார். அந்தப் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர், இந்தச் சம்பவத்தை மூடிமறைப்பதற்கு முயற்சித்த அந்தப் பாடசாலையின் அதிபர் மற்றும் 3 ஆசிரியைகள் ஆகியோரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேற்படி பாடசாலையில் கற்பிக்கும் 45 வயதுடைய ஆசிரியர் ஒருவர், அங்கு கல்வி கற்கும் 12 வயது மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் இவ்விடயத்தை தெளிவுபடுத்தியுள்ளார். இதையடுத்து, பெற்றோர் பாடசாலைக்குச் சென்று அதிபரிடம் வினாவியபோது, இந்த விடயத்தை இத்துடன் விடுமாறும், அதுவே நல்லது எனவும் வெளியில் தெரியப்படுத்தவேண்டாம் எனவும் அதிபர் மற்றும் அங்கிருந்த 3 ஆசிரியைகள் பெற்றோர்களை அச்சுறுத்தும் பாணியில் கூறியுள்ளனர்.
இந்த விடயத்தை அறிந்த பிரதேசவாசியொருவர், சாவகச்சேரி சிறுவர் நன்னடத்தை அதிகாரியின் கவனத்துக்கு கொண்டுவந்ததையடுத்து, நடவடிக்கை எடுத்த சிறுவர் நன்னடத்தை அதிகாரி, சம்பவத்தை உறுதிப்படுத்தியதுடன், இது தொடர்பில் கொடிகாமம் பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டு வந்தார். பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், அதிபரும் சம்பந்தப்பட்ட ஆசிரியரும் இச்சம்பவத்துக்கு உடந்தையாகவிருந்த 3 ஆசிரியைகளையும் பொலிஸார் கைத செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை நீதவானின் வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.