பக்கங்கள்

பக்கங்கள்

21 ஜூன், 2016

தீனதயாளனை 15 நாள் சிறையில் அடைக்க சென்னை எழும்பூர் கோர்ட் உத்தரவு




பிரபல சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன் (வயது 85) கைது செய்யப்பட்டு, சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்தவர் தீனதயாளன். இவர் பல ஆண்டுகளாக பழங்கால சிலைகளை கடத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தார். இவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 400க்கும் மேற்பட்ட அரிய சிலைகள், ஓவியங்கள் கைப்பற்றப்பட்டன. போலீசாரிடம் சரணடைந்த தீனதயாளனிடம் கடந்த 18 நாட்களாக விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று அவர் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து தீனதயாளன் சென்னை எழும்பூர் 10வது குற்றவியல் நடுவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். தீனதயாளனை 15 நாள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது