பக்கங்கள்

பக்கங்கள்

21 ஜூன், 2016

தேர்தலில் எதிர்த்து பணியாற்றிய தி.மு.க. பிரமுகர்கள் நீக்கம்: கட்சி மேலிடம் நடவடிக்கை


சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட கே.கே.நகர் தனசேகரனுக்கு எதிராக தேர்தல் பணியாற்றிய திமுக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

சென்னை தெற்கு மாவட்டம், கலைஞர் நகர் வடக்குப் பகுதி 127-வது வட்ட துணைச் செயலாளர் எல்.நாகலிங்கம், வட்ட முன்னாள் செயலாளர் பா.குமரன், ஜி.சக்கரை, சி.ராமலிங்கம், 128அ வட்டத்தைச் சேர்ந்த முன்னாள் மாவட்ட பிரதிநிதி ந.மணி ஆகியோர் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது கழக வேட்பாளருக்கு எதிராகப் பணியாற்றியதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதாலும் தி.மு.க. உறுப்பினர் பொறுப்பு உள்பட கழகத்தின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.