பக்கங்கள்

பக்கங்கள்

8 ஜூன், 2016

யூரோ 2016 கால்பந்து போட்டியை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி; பிரான்ஸ் அதிபர் கவலை


2016-ம் ஆண்டிற்கான யூரோ கோப்பை கால்பந்துப் போட்டி பிரான்ஸில் வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 10) தொடங்குகிறது.
போட்டிகள் நடைபெறும் போது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக அமெரிக்கா கடந்த வாரம் எச்சரித்து இருந்தது. இந்நிலையில், பிரான்ஸில் யூரோ கோப்பைக் கால்பந்துப் போட்டி தொடங்குவதற்கு முன்பாகவும், போட்டிகள் நடக்கும் போதும் 15 இடங்களில் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியதாக பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவரை உக்ரைன் போலீஸார் கைது செய்தனர். 

இந்நிலையில், "பிரான்ஸ் இன்டர்' வானொலிக்கு பிரான்ஸ் அதிபர் பிரான்காயிஸ் ஹாலந்தே அளித்த பேட்டி ஒன்றில், தான் இதுகுறித்து அதிகம் கவலைப்படுவதாக தெரிவித்துள்ளார். எனினும், கால்பந்து போட்டியை வெற்றிகரமாக நடத்துவதில் உறுதியாக இருப்பதாக அவர் தெரிவித்தார். 

லட்சக்கணக்கான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், கால்பந்து ரசிகர்களும் இந்த போட்டிகளை காண குவிவார்கள் என்பதால் பிரான்ஸ் முழுவதும் பாதுகாப்பு உஷார்படுத்தப்பட்டுள்ளது. போலீஸ், துணை ராணுவம், ராணுவம் ஆகியவை அங்கு குவிக்கப்பட்டுள்ளன.