பக்கங்கள்

பக்கங்கள்

10 ஜூன், 2016

3 மாவட்டச்செயலாளர்கள் மாற்றம்: திமுக தலைமை அதிரடி


நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் 3 மாவட்டச்செயலாளர்களை மாற்றி திமுக தலைமை அதிரடியாக அறிவித்துள்ளது.

கோவை மாநகர் வடக்கு மாவட்டச்செயலாளர் எம்.வீரகோபாலை மாற்றிவிட்டு, அதற்கு பதிலாக மு.முத்துசாமியை மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நாமக்கல் கிழக்கு மாவட்டச்செயலாளரும், முன்னாள் மைய அமைச்சருமான செ.காந்திசெல்வனை மாற்றிவிட்டு, அவருக்கு பதிலாக பார்.இளங்கோவன், மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல், நெல்லை மேற்கு மாவட்டச்செயலாளர் பெ.கி.துரைராஜ் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு, சிவ.பத்மநாபன் மாவட்டப் பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.