பக்கங்கள்

பக்கங்கள்

10 ஜூன், 2016

ஸ்டாலினின் அறிக்கையும்...அதிமுகவின் பதிலடியும்

சட்டம் ஒழுங்கிற்கும், பொது அமைதிக்கும் சவாலாக மாறி வரும் கூலிப்படை கலாசாரத்திற்கு முடிவு கட்டி, பொது மக்களின்
அச்சத்தை போக்க அதிமுக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், திமுக ஆட்சியில் நடந்த கொலை குற்றங்கள் பற்றியும், குற்றப் பின்னணி உடைய திமுக பிரமுகர்கள் பற்றியும், தகவல்கள் திரட்ட அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, மாவட்ட வாரியாக தகவல்கள் எடுக்கப்பட்டு உள்ளன. கொலை குற்றவாளிகள் நில அபகரிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், கட்டபஞ்சாயத்து, ரவுடியிசம், கள்ளச்சாராயம் போன்ற பல்வேறு குற்றப்பின்னணி உடைய தி.மு.க பிரமுகர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டதில் மதுரையில் மட்டும் 25 பேர் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விவரங்கள் அடங்கிய பட்டியலை விரைவில் அதிமுக வெளியிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.