பக்கங்கள்

பக்கங்கள்

27 ஜூன், 2016

சிறுமி துஸ்பிரயோகம் : 9ஆசிரியர்களுக்கு விளக்கமறியல்

யாழ் வரணி பகுதியில் உள்ள பாடசாலை மாணவி ஒருவரை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் இதுவரை
பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் உட்பட 9 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வரணி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 6இல் கல்வி கற்கும் 11 வயதுடைய மாணவியை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பாக கடந்த (19) திகதி துஷ்பிரயோகம் புரிந்ததாக சந்தேகிக்கப்படும் ஆசிரியரையும் மற்றும் சம்பவத்தை மறைக்கமுற்பட்டனர் என்ற குற்றச்சாட்டில் திகதி அதிபர், ஆசிரியர்கள் உட்பட 5 பேர்கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அதே பாடசாலையை சேர்ந்த மேலும் 3 ஆசிரியர்களும் பழைய மாணவர் ஒருவரும் சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதுவரை இச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 9 பேரையும் எதிர்வரும் யூலை 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
மேற்படி சிறுமி துஷ்பிரயோகம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.