பக்கங்கள்

பக்கங்கள்

27 ஜூன், 2016

போருக்குப் பின்னர் யாழில் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரிப்பு

போருக்கு பின்னர் யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகும் சம்பவங்கள்
அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது.
ஊடகங்களில் வெளியாகும் தகவல்களை விட அதிகளவான சிறுவர் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் நடப்பதாக அகில இலங்கை சிறுவர் காப்பக அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் கே.கே. கீர்த்திரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமையை தடுக்க சிறுவர் மற்றும் வயது வந்தவர்களுக்கு விளக்கமளிக்கும் வேலைத்திட்டத்தை செயற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதற்காக விசேட வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.