பக்கங்கள்

பக்கங்கள்

29 ஜூன், 2016

உள்ளூராட்சி மன்ற சர்ச்சை - நாளை முடிவு

உள்ளூராட்சிமன்றங்களின் காலஎல்லை நீடிக்கப்படுமா இல்லையா என்பது தொடர்பில் நாளை நள்ளிரவுக்குள் அறிவிக்கவுள்ளதாக, உள்ளூராட்சிமன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். 

சில உள்ளூராட்சி மன்றங்களுக்கான காலஎல்லை நாளையுடன் நிறைவடையவுள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேசி இது குறித்து இறுதி தீர்மானத்திற்கு வரவுள்ளதாக,அவர் குறிப்பிட்டுள்ளார்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான கால எல்லை நான்கு வருடங்களாகும். ஆனால் அதனை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிப்பதற்கான அதிகாரம் உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சருக்கு உண்டு எனவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்