பக்கங்கள்

பக்கங்கள்

29 ஜூன், 2016

யுத்தக் குற்ற விசாரணை கோரிக்கையை நிராகரிக்கவில்லை அரசு- மங்கள

யுத்தக் குற்ற விசாரண தொடர்பிலான கோரிக்கைகைளை இலங்கை  ஒரு ஜனநாயக அரசு என்ற வகையில் நிராகரிக்கவில்லை என வெளிவிகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

யுத்தக்குற்ற விசாரணைகள் மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்களில் சர்வதேச நீதிபதிகளின் தலையீடுகள் அவசியமென ஒருசாராரும், உள்ளக பொறிமுறையூடான விசாரணைகளுக்கு வெளிநாட்டு நீதிபதிகளின் தலையீடு அவசியமற்றது என ஒரு சிலரும் கூறுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் ஒரு  ஜனநாயக அரசு என்ற வகையில் இந்த கோரிக்கைகளை முழுமையாக நிராகரிக்கவில்லை எனவும் அவர் ஜெனீவாவில் இலங்கையின் முன்னேற்றங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தும்  இராஜதந்திரிகளுடனான கூட்டத்தில்  தெரிவித்துள்ளார்.  

இலங்கை    தூதரகத்தின் ஏற்பாட்டில்   இடம்பெற்ற இந்தச் சந்திப்பில், யுத்தக்குற்ற விசாரணை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் தற்போதைய அரசு பரிசீலித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

19ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக சுயாதீன ஆணைக்குழுக்களை அமைத்துள்ளதோடு டகச்சுதந்திரத்தை மீள உறுதி செய்யும் வகையில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

காணாமற்போனோர் தொடர்பிலான நிரந்தர அலுவலகம் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, காணாமற்போனவர்களுக்கு சான்றிதழ் வழங்குவது தொடர்பிலான பிரேரணைக்கு அடுத்த மாதமளவில் நாடாளுமன்றின் அனுமதியை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடன் இலங்கை நெருக்கமாக பணியாற்றி வருவதாகவும், 1972 மற்றும் 78ஆம் ஆண்டுகளில்  கொண்டுவரப்பட்ட அரசியல், நாட்டின் பன்முகத்தன்மை கருத்திற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த குறைபாடுகள் நீக்கப்பட்டு தனிமனித சுதந்திரம் உறுதிப்படுத்தப்படும் வகையில் புதிய யாப்பு உருவாக்கப்படும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டிலிருந்து   வெளியேறிய ஊடகவியலாளர்கள் மீண்டும் நாடு திரும்ப வேண்டுமென்பதோடு, புலம்பெயர் தமிழர்களும் நாடு திரும்ப வேண்டுமென அழைப்பு விடுப்பதாகவும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.