பக்கங்கள்

பக்கங்கள்

9 ஜூன், 2016

தி.மு.க. நிர்வாகிகள் – நடிகர் போண்டா மணி ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் சேர்ந்தனர்

தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் நகைச்சுவை நடிகர் போண்டா மணி ஆகியோர் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து தங்களை
அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.
தி.மு.க.வை சேர்ந்த மாநில பிரச்சாரக் குழுச் செயலாளரும், வடபழனி முருகன் திருக்கோயில் முன்னாள் அறங்காவலருமான கண்மணி; திமுக மாநில மகளிர் அணி துணைச் செயலாளரும், திருவாரூர் நகர மன்ற முன்னாள் தலைவருமான விஜயகுமாரி;
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றிய முன்னாள் திமுக செயலாளரும், போளூர் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டவருமான ஏழுமலை, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி முன்னாள் துணை அமைப்பாளரும், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினருமான செந்தில்குமார்,
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் திருவள்ளூர் வடக்கு மாவட்ட இளைஞர் அணித் தலைவர் வழக்கறிஞர் இமாலயா அருண் பிரசாத்; நேசமணியின் பேரன் ரெஞ்சித் அப்போலஸ் நேசமணி;
நகைச்சுவை நடிகர் போண்டா மணி; தியாகராயநகர், லட்சுமி காலனியைச் சேர்ந்த அக்சய் முரளி, ஆகியோர் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து தங்களை அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு அ.தி.மு.க. உறுப்பினர் உரிமைச் சீட்டுகளை வழங்கி வரவேற்றார்.
தங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டதற்காக, முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.