பக்கங்கள்

பக்கங்கள்

24 ஜூன், 2016

புகையிரதம் முன் பாய்ந்து இளம் யுவதி தற்கொலை! யாழ். மீசாலைப் பகுதியில் சம்பவம்

யாழ். மீசாலை பகுதியில் புகையிரத்தம் முன் பாய்ந்து இளம் யுவதி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதத்தில் பாய்ந்தே குறித்த யுவதி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
யாழ். மீசாலை வீரசிங்கம் மகாவித்தியாலயத்தில் 2014ஆம் ஆண்டு உயர்தப் பிரிவில் கல்வி கற்ற 20 வயதான செல்வரத்தினம் புனிதா என்பரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதேவேளை, தற்கொலைக்கான காரணம் இது வரை வெளியாகாத நிலையில், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.