பக்கங்கள்

பக்கங்கள்

23 ஜூன், 2016

கேள்வி கேட்ட நிருபரின் மைக்கை தூக்கி எரிந்த கால்பந்து வீரர் ரொனால்டோ:வீடியோ

நிருபர் ஒருவர் கேள்வி கேட்டதால் அவரிடம் இருந்த மைக்கை பிடிங்கி அருகில் உள்ள குளத்தில் வீசி உள்ளார் கால்பந்து வீரர் ரொனால்டோ இந்த சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் ஆஸ்திரியா அணியுடனான போட்டியில் பெனால்டி வாய்ப்பை ரொனால்டோ தவறவிட்டதால் அந்த போட்டி டிராவில் முடிந்தது. இந்நிலையில் தனியார் டி.வியை சேர்ந்த நிருபர் ஒருவர் ரொனால்டோவிடம் ஹங்கேரியுடனான போட்டிக்கு நீங்கள் தயாராக உள்ளீர்களா? என்று கேள்வி எழுப்பினார். அப்போது கோபத்தில் இருந்த ரொனால்டோ, நிருபரிடம் வைத்து இருந்த மைக்கை பிடிங்கி அருகில் உள்ள குளத்தில் வீசி விட்டு சென்றுவிட்டார்.

இந்த சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.