பக்கங்கள்

பக்கங்கள்

3 ஜூன், 2016

மன்னிப்பு கேட்ட வைகோ!

குமரி மாவட்டத்தின் முன்னாள் மதிமுக மாவட்டச் செயலாளரான மறைந்த ரத்தின ராஜின் இல்ல திருமண விழாவுக்கு இன்று காலை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நாகர்கோவில் ஒழுகினாச்சேரியில் உள்ள பெருமாள் திருமண மண்டபத்திற்கு வந்திருந்தார். 

அவர் வருவதற்கு சற்று முன்னர் அங்கு செய்தியாளர்கள் குவிந்திருந்தனர். அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த மதிமுக தக்கலை ஒன்றிய செயலாளர் ஜெ.பி.சிங் மற்றும் மதிமுகவைச் சேர்ந்த ரெஜிஸ் இருவரும் செய்தியாளர்களை தரக்குறைவாக பேசினர்.

உடனே செய்தியார்கள் அனைவரும் வைகோ வந்ததும் அவரின் காரின் முன்பு அமர்ந்தனர். பத்திரிகையார்களை தரக்குறைவாக பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். காரை விட்டு இறங்கிய வைகோ, சம்மந்தப்பட்ட இரண்டு நிர்வாகிகளையும் அழைத்து வந்து மன்னிப்பு கேட்க வைத்துவிட்டு, தானும் மன்னிப்பு கேட்பதாக தெரிவித்தார். பின்னர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த சம்பவம் கட்சிக் காரர்கள் மற்றும் திருமணத்திற்கு வந்தவர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியது