பக்கங்கள்

பக்கங்கள்

24 ஜூன், 2016

யாழ்ப்பாணத்தில் GPL கிரிக்கெட் போட்டிகள்

தெல்லிப்பளை மகாஜனக்கல்லூரியின் விளையாட்டு தரத்தை மேம்படுத்தவும் பாடசாலையை விட்டு வெளியேற்றிய மகாஜனன்கள் நல்ல பண்புடையவர்களாகவும்
ஆரோக்கியமானவர்களையும் சமூகத்தில் சிறந்து விளங்கவும் என்ற உன்னத நோக்கத்துடன் 1960 இல் ஆரம்பிக்கப்பட்டதுதான் கிறாஸ்கொப்பர்ஸ் வி.கழகம்.
கிறாஸ்கொப்பரஸ் பழைய, புதிய வீரர்களையும் மகாஜனன்களையும் ஒன்றிணைத்து சினேக பூர்வ துடுப்பாட்ட போட்டி யொன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
யாழ் மாவட்டத்தில் பதிவு செய்த 19 விளையாட்டு கழகங்களிலிடமிருந்து 2 சகல துறை வீரர்களை தெரிவு
செய்து அத்துடன் எமது கிறாஸ்கொப்பர்ஸ் கழகத்தில் இருந்து போகும் 4 பேரை உள்ளடக்கி 42 வீரர்களை உள்வாங்கி 6 அணிகளாக வகுத்து இந்த துடுப்பாட்ட நிகழ்வை ஒரு நாளில் நடத்துவதாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இப்போட்டிகள் 6 பேர் கொண்ட 5 ஓவர் போட்டியாக இடம்பெறவுள்ளது.
1986ம் ஆண்டு சென்ஜோன்ஸ் கல்லூரியில் நடைபெற்று 6 பேர் கொண்ட 5 பேர் போட்டியில் கிறாஸ்கொப்பர்ஸ் வி.கழகம் மாவட்ட வெற்றி வீரர்களாக வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்தனர்.
இந்த அணியிலே அமரர்களான றோகான்ரூபவ் சங்கர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். எனவே அவர்களை நினைவுகூரும் போட்டியாக இது அமைவது சிறப்பம்சமாகும்.
6 அணிகளையும் 6 உரிமையாளர்கள் பெற்றுக் கொண்டனர், வீரர்களும் ஏலத்தில் பெறப்படடமை சிறப்பம்சமாகும்.
எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை இந்தப் போட்டிகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
3 4 1 g1