பக்கங்கள்

பக்கங்கள்

1 ஜூலை, 2016

அடையாளம் காணப்படாமல் இலங்கையில் 2000 எயிட்ஸ் நோயாளிகள்!

HIV தொற்றுக்குள்ளான இதுவரை அடையாளம் காணப்படாத சுமார் 2000 பேர் இலங்கையில் இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

HIV தொற்றுக்குள்ளான 2400 பேர் வரை இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சின் பாலியல் நோய்கள் தொடர்பான பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சிசிர லியனகே குறிப்பிட்டார்.

அடையாளம் காணப்பட்டுள்ளவர்களில் 50 வீதமானோர் ஓரினச் சேர்க்கையாளர்கள் என்றும் பாலியல் நோய்கள் தொடர்பான பிரிவின் பணிப்பாளர் கூறினார்.

இது தவிர நிர்மாணங்கள் இடம்பெறும் சூழல்களில் பணிபுரியும் தொழிலாளர்களில் பலர் HIV தொற்றுக்கு இலக்காகியுள்ளமை தெரியவந்துள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.