பக்கங்கள்

பக்கங்கள்

1 ஜூலை, 2016

அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றிப் பெற்றதை எதிர்த்து திருமாவளவன் வழக்கு


தமிழக சட்டசபைக்கு கடந்த மே மாதம் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில், கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் சட்டசபை தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிட்டார். அதேபோல, அ.தி.மு.க. சார்பில் முருகுமாறன் போட்டியிட்டார். தேர்தல் முடிவின் போது, திருமாவளவனை விட 83 ஓட்டுகள் அதிகம் பெற்று, முருகுமாறன் வெற்றிப் பெற்றார்.

இதையடுத்து முருகுமாறன் வெற்றிப் பெற்றதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் திருமாவளவன் தேர்தல் வழக்கை இன்று காலையில் தாக்கல் செய்தார். அதில், ‘ஆளும் கட்சியை சேர்ந்த முருகுமாறனுக்கு, அரசு அதிகாரிகள் உடந்தையாக செயல்பட்டனர். வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது. அதனால், முருகுமாறன் முறைகேடாக இந்த தேர்தலில் வெற்றிப் பெற்றுள்ளார். எனவே, அவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.