பக்கங்கள்

பக்கங்கள்

17 ஜூலை, 2016

ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ஏழை மாணவி மருத்துவ படிப்புக்கு ஜெயலலிதா 50 ஆயிரம் உதவி

புரட்சித்தலைவி அம்மா பெஸ்ட் சேரிடெபிள் டிரஸ்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ‘’திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பதற்கு இடம் கிடைத்துள்ள ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி, அந்தநல்லூர் ஒன்றியம், மேலகுழுமணி கிராமத்தைச் சேர்ந்த முத்துவீரன் - மலர்க் கொடி ஆகியோரது மகள் பிருந்தாதேவி, தனது தந்தை உடல் நலம் சரியில்லாதவர் என்றும், தனது தாய் கூலி வேலை செய்து குடும்பத்தை வழிநடத்தி வருவதாகவும் தெரிவித்து, மருத்துவப்படிப்புக்கு நிதியுதவி வழங்க வேண்டி அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதாவுக்கு வேண்டுகோள் வைத்திருந்தார்.

ஏழ்மை காரணமாக, உயர் கல்வி பெறுகின்ற நல்வாய்ப்பை யாரும் இழந்து விடக் கூடாது என்ற மனிதாபிமான அக்கறை கொண்ட முதல்- அமைச்சர் ஜெயலலிதா, மாணவி பிருந்தாதேவியின் வேண்டுகோளை கருணை உள்ளத்தோடு பரிசீலித்து, மாணவியின் மருத்துவப் படிப்புக்கான முழு செலவையும் ஏற்றுக் கொண்டார்.

முதலாம் ஆண்டு கல்லூரிக் கட்டணம், விடுதிக் கட்டணம், புத்தகக் கட்டணம் உட்பட மொத்தம் ரூ. 50 ஆயிரம் “புரட்சித் தலைவி அம்மா பெஸ்ட் சேரிடெபிள் டிரஸ்ட்”டில் இருந்து வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்’’என்று கூறப்பட்டுள்ளது