பக்கங்கள்

பக்கங்கள்

7 ஜூலை, 2016

கனேடிய குடியுரிமைச்சட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் பாராளுமன்ற அங்கீகாரம் – செனட் சபையின் அங்கீகாரத்திற்காகக் காத்திருப்பு.

கடந்த ஜூன் 17 அன்று, கனேடியக் குடியுரிமைச் சட்டத்திற்கான திருத்தங்கள் (Bill C-6) கனேடிய பராளுமன்றத்தினால் அதன் மூன்றாவது வாசிப்பு
க்குப் பின் அங்கீகரிக்கப்பட்டது
அதேதினம், அச்சட்டமூலம் கனேடிய செனட் சபையின் முதலாம் வாசிப்புக்குச் சமர்ப்பிக்கப்பட்டது. திருத்தப்பட்ட சட்டமூலத்தைக் கனடா தினமான ஜூலை முதலாம் திகதிக்கு முன்னதாக சட்டாமாக்கலாம் என கனேடிய அரசு எதிர்பார்த்திருந்தது. ஆயினும் செனட் சபை கோடை விடுமுறையின் பின் கூடும்போதே இது சாத்தியமாகும் எனத்தெரிகிறது.
கனேடியக் குடியுரிமைச் சட்டத்தில், கனேடிய அரசு பாரிய மாற்றங்களைக் கொண்டுவர முனைகிறது. இதன்பிரகாரம் கனடாவில் நிரந்தர வதிவிட அந்தஸ்தில் உள்ளவர்கள், தமது குடியுரிமை விண்ணப்பங்களை தற்போதுள்ளதைவிட முன்பதாகவே சமர்ப்பிக்கலாம்.