பக்கங்கள்

பக்கங்கள்

7 ஜூலை, 2016

மகிந்தவின் நிழல் அமைச்சரவையின் முதலாவது அமர்வு இன்று!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சார்பாக குரல் கொடுத்துவரும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நிழல் அமைச்சரவையின் முதலாவது அமர்வு இன்றைய தினம் நடைபெறவுள்ளது.

இதன்போது நிழல் அமைச்சர்கள் நியமனம் இடம்பெறவுள்ள அதேவேளை சில முக்கிய தீர்மானங்களும் எடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜித் சொய்ஸா தெரிவித்துள்ளார்

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியில் அங்கம் வகிக்கும் அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை கட்சியின் தலைவரும், பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க அவசரமாக சந்திக்கின்றார்.

இந்த சந்திப்பு நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இன்று வியாழக்கிழமை பிற்பகல் நடைபெறவுள்ளது.

அதேபோன்று ஐக்கிய தேசிய முன்னிணியில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள், உறுப்பினர்களையும் பிரதமர் இன்றைய தினம் சந்திக்க தீர்மானித்துள்ளார்.

இதற்கமைய இந்த சந்திப்பு இன்று மாலை 6.30 அளவில் அலரிமாளிகையில் நடைபெறவுள்ளதாக இராஜாங்க கல்வியமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன்  தெரிவித்தாமகிந்தவின் நிழல் அமைச்சரவையின் முதலாவது அமர்வு இன்று!